இலங்கை பொலிஸாரின் இடமாற்ற நடைமுறை

97 0
இலங்கை பொலிஸாரின் இடமாற்ற நடைமுறையை தெளிவுபடுத்தும் வகையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சேவையின் அவசியம் கருதி பொலிஸ் அதிகாரிகளை பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிக்கு உட்பட்டது, மேலும், பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் தலைமையக கண்காணிப்பாளர்கள், பொறுப்பதிகாரிகளுக்கும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் இடமாற்றக் கொள்கைகளுக்கு அமைவாக இடமாற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

அதற்கமைய,

1. ஒரு தலைமையக பொலிஸ் கண்காணிப்பாளர் அல்லது பொறுப்பதிகாரி 3 வருட காலத்திற்குப் பிறகு இடமாற்றத்திற்கு தகுதியுடையவர்.

2.ஒரு பொலிஸ் அதிகாரியின் செயல்திறன் மோசமாக இருக்கும் சந்தர்ப்பங்களில், அந்த அதிகாரியை பொறுப்பதிகாரி பதவியில் தக்கவைத்துக்கொள்வது இனி பொருத்தமானதல்ல என்பதால் இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன.

3.பொலிஸ் அதிகாரிகளின் ஊழல் அல்லது தவறான நடத்தை தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் தொடர்புடைய விசாரணைகள் முடிந்த பிறகு இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன.

4.மனிதாபிமான அடிப்படையில் செய்யப்படும் கோரிக்கைகளின் அடிப்படையில் இடமாற்றங்கள் வழங்கப்படுகின்றன.

5.சேவையின் அவசியம் கருதி இடமாற்றங்கள் செய்யப்படுகின்றன.