உலகப் புகழ்பெற்ற SpaceX நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், இன்று (2) ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்குவதாக அறிவித்தார்.
வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு பின்னர் சுமார் 130இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணைய சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு, பயனர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற இணைய அணுகலை வழங்கும்.
தற்போது, இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் 12,000 ஆகவும், எதிர்காலத்தில் 30,000 இற்கும் அதிகமாக அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த இணைய அமைப்பு மிகவும் எளிதாக நிறுவக்கூடிய ரவுட்டராக வருகிறது.
பதிவிறக்க வேகம் 50mbps – 250mbps வரை இருக்கும் என்று SpaceX குறிப்பிட்டுள்ளது

