இந்தியாவின் ஆக்ரா நகரத்தில் உள்ள கேந்திரிய இந்தி சன்ஸ்தானில் (KHS) நடைபெறவிருக்கும் இந்தி ஆசிரியர் பயிற்சி திட்டத்திற்கு இலங்கையில் உள்ள 35 இந்தி ஆசிரியர்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் கடமையாற்றும் 35 இந்தி ஆசிரியர்களே இவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்தி ஆசிரியர்களுக்கான முதல் பயிற்சி திட்டம் இதுவாகும்.
கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்த கலாச்சார மையம் மற்றும் ஆக்ராவில் உள்ள கேந்திரிய ஹிந்தி சன்ஸ்தான் ஆகியன இணைந்து இந்த பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்ட 35 இந்தி ஆசிரியர்களுடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உரையாடினார்.
இந்த உரையாடலின் போது இந்திய உயர்ஸ்தானிகர், தெரிந்தெடுக்கப்பட்ட 35 இந்தி ஆசிரியர்களையும் பாராட்டினார்.
இந்த பயிற்சி திட்டத்தின் ஊடாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தப்படும் எனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது தெரிவித்தார்.
இந்த பயிற்சி திட்டத்தின் போது, தெரிந்தெடுக்கப்பட்ட இந்தி ஆசிரியர்களுக்கு இந்தியாவின் கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிடுவதற்கு கேந்திரிய இந்தி சன்ஸ்தான் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




