களுத்துறையில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவு!

51 0

களுத்துறை மாவட்டத்தில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுத்துறை மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட 13 சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவுகளில் இருந்து 1,004  டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவற்றில் பாணந்துறை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவிலிருந்து 248 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் வாதுவை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவிலிருந்து 141 டெங்கு நோயாளர்களும் பண்டாரகமை சுகாதார வைத்திய  அதிகாரி பிரிவிலிருந்து 115 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடு மற்றும் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறு களுத்துறை மாவட்ட தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.