படகு விபத்து : காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் மீட்பு

89 0

தங்காலை, பரவிவெல்ல கடற்பகுதியில் பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடற்படையினரின் உதவியுடன் விமானப்படை மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது குறித்த மீனவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

6 மீனவர்களுடன் பயணித்த படகு, மீன்பிடிக்கச் சென்றுவிட்டு மீன்பிடித் தளத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த நேரத்தில் படகில் 6 மீனவர்கள் இருந்ததோடு, அவர்களில் நான்கு பேர் ஒரு டிங்கி படகு உதவியுடன் மீட்கப்பட்டனர்.

விபத்தில் காணாமல் போன மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.