பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதைப்பொருள் வியாபாரி கைது

53 0

நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதைப்பொருள் விநியோகம் செய்துவந்த சந்தேக நபர் ஒருவர் களுத்துறை வடக்கு பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கு, பொன்சேகா வீதி பிரதேசத்தில் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து 110 கிராம் 17 மில்லிகிராம் ஹெராயின், 101 கிராம் 47 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 750,000 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

39 வயதுடைய குறித்த சந்தேகநபருக்கு எதிராக களுத்துறை மேல் நீதிமன்றம் மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தால் இரண்டு வழக்குகளுக்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரிடம் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.