ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை ஆரோக்கியமானதல்ல

72 0

ஐக்கிய நாடுகள் சபையினுடைய மனித உரிமைகள் ஆணையாளர் வருகையின் போது நீண்ட காலமாக புரையோடி போய்க் கிடக்கின்ற செம்மணி படுகொலை சம்பந்தமாக தமிழ் தலைமைகள் விரிவாக பேசிய போதும் அவர் நாட்டை விட்டு செல்கின்ற போது சொல்லி இருக்கின்ற அறிக்கை அவ்வளவு ஆரோக்கியமானதாக அல்ல என முன்னால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (29)  இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,

தொடர்ந்தும் தெரிவிக்கையில் காரணம் மனித உரிமை ஆணையாளர் இந்த நாட்டின் தற்போது, இஸ்ரேலிய கொடும் கோலர்களால் சிறு குழந்தைகளும், பெண்களும் மருத்துவமனை தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கின்ற போதும் அது தொடர்பில் எந்த ஒரு முன்னெடுப்பையும் எடுக்காத ஒரு ஆணையாளரா ல் செம்மணி தொடர்பான தீர்வு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை இல்லை.

ஏற்கனவே நவநீதன் பிள்ளை அவர்கள் செம்மணி தொடர்பாக நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக  அதன் உண்மை தன்மை தொடர்பாக மிக விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலியர்களால் காசா மக்கள் கொல்லப்படுவதை இவர்களால் கண்டிக்கவோ அறிக்கை விடவோ முடியாத போது எவ்வாறு செம்மணிக்கு தீர்வு கிடைக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்பதுடன் மேலும் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் பற்றியும் இவ்வாறு தெரிவித்தார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கக்கூடிய 157 ஆசனங்களை விட மற்றவர்களுடைய எந்த உதவியும் தேவையில்லை என்று சொன்ன ஆட்சியாளர்கள் இன்று பேரம் பேசுகின்ற அல்லது ஒவ்வொரு சபையை அமைப்பதிலே அவர்கள் வெற்றி காண்கின்ற போது கொலரை உயர்த்திக் கொள்கின்ற தன்மை ஜீவன் கொண்ட மான் போன்றவர்கள் புத்தி சாதுரியமாக, மலையகத்திலே அவர்கள் அவர்களோடு பேசிய பேச்சு வார்த்தைகள் போன்று  முஸ்லிம் சமூகத்திற்கும் மத்தியிலே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனித்து நின்று போட்டியிட்டு இருந்தால் 250க்கும் மேற்பட்ட ஆசனங்களை அவர்கள் பெற்றிருப்பார்கள்.

தற்பொழுது பெற்ற 140 ஆசனங்களில் கூட எந்த தலைமைகளோடும் பேச்சுவார்த்தை நடத்தாமல் அவர்கள் சார்ந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுடனும்  அனுரகுமாராவுடனும் பேசி ஒப்பந்தம் செய்திருந்தால் தனித்து பல சபைகளை ஆட்சியமைத்திருப்பார்கள்.

எதிர்காலத்தில் உள்ளூராட்சி சபை,மாகாண சபை தனித்துவமாக தனிச்சின்னத்திலே போட்டியிடுவதன் மூலமாகவே பேரம் பேசுகின்ற தன்மைக்கும் சமூகத்தின் உரிமைக்கும் குரல் கொடுக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றார்.