கண்டி- கொழும்பு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

93 0

கண்டி- கொழும்பு பிரதான வீதி மாஹேன பகுதியில் மோட்டார் சைக்கிளில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வரகாபொல பொலிஸார்  தெரிவித்தனர்.

இந்த விபத்து சனிக்கிழமை (28) இடம்பெற்றது.

விபத்தில் படுகாயமடைந்தவர் வரகாபொல வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடையவர் ஆவார்.

விபத்து  தொடர்பில் வரகாபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.