பொரளை, கந்தானையில் நிதிமோசடி; மூன்று வீடுகள் கைப்பற்றல்

58 0

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்  ஆணும் ஒருவரும், பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களின் அதிக மதிப்புள்ள சொத்துக்கள் பல நிதிமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டுள்ளன.

கொழும்பு 8,  பொரளை பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 45 வயதுடைய இருவரே நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்திலிருந்து கிடைத்த பணத்தைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவர்களிடமிருந்து கந்தானையில் நான்கு மாடி வீடு ஒன்று, கொழும்பு 08, பொரளையில் இரண்டு அடுக்கு மாடி வீடுகள் இரண்டு, கொழும்பு 08, பொரளை மூன்று மாடி வீடு ஒன்று, ஜப்பானிய ஆல்டோ வாகனம் ஒன்று,  வேகன் ஆர் வாகனம் ஒன்று ஆகியவை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினால் நிதிமோசடி சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நேற்றைய தினம் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.