யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் இருந்து கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட 850 கிலோமீட்டர் நீளமுள்ள பாதயாத்திரை, சுமார் 45 நாட்களாக வெவ்வேறு இடங்களை கடந்து பயணித்த பக்தர்கள், வியாழக்கிழமை (26) அன்று கதிர்காம முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
இந்த பாதயாத்திரை, நேத்திக்கடனை நிறைவேற்றும் ஒரு ஆளுமைமிக்க பக்திப்பயணமாகும். இந்த ஆண்டுக்கான பாதையாத்திரை, கிழக்கு மாகாணத்தின் பாணமை உகந்தமலை முருகன் ஆலயத்தை கடந்த ஜூன் 19 அன்று சென்றடைந்து, அதனுடன் இணைந்த காட்டுவழிப் பாதை வெள்ளிக்கிழமை (20) சம்பிரதாயபூர்வமாக திறக்கப்பட்டது.
இததனையடுத்து, 5 நாட்கள் காட்டுவழியில் பக்தர்கள் கடுமையான நடைபயணத்தை மேற்கொண்டு, இறுதியில் வியாழக்கிழமை (26) கதிர்காமத்தை அடைந்தனர்.
இந்த ஆண்டுக்கான காட்டுவழி பாதை ஜூலை 4 ஆம் திகதிக்கு பின் மூடப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை, பாதைபயணத்தின் போது தண்ணீர் வசதி இல்லாமல் பக்தர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டதாகவும், இது முந்தைய ஆண்டுகளில் இல்லாத புதிதான பிரச்சினையாக இருந்ததாகவும், அதற்காக பொறுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.








