பசறை-லுனுகல மலைப் பகுதியில் நான்காவது நாளாக காட்டுத் தீ பரவல்

63 0

பசறை லணுகலை மலை வனப் பகுதியில் கடந்த 4 நாட்களாக காட்டுத்தீ பரவி வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக பதுளை மாவட்டத்தில் தொடரும் வரட்சியான காலநிலையினால் காட்டுத்தீ பரவி வருவது அதிகரித்து காணப்படுகின்றது.

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லுணுகலை மலை என அழைக்கப்படும்  மலை பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்தும் காட்டுத்தீ பரவி வருவதோடு சுமார் 4 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காட்டுத்தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியாத போதிலும் குறித்த வனப்பகுதிக்கு அருகில் உள்ள தோட்டப் பகுதிகள் புகை மண்டலமாக காணப்படுவதையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.