எயிட்ஸ், காசநோய்களுக்கான தடுப்பு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்

75 0

எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயலாற்றுவதற்கான உலகளாவிய நிதியத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்கொடை நிதியத்தின் கீழ் எயிட்ஸ், காசநோய்களுக்கான முகாமைத்துவம், தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துவதற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியா போன்ற மூன்று நோய்களுக்கான முகாமைத்துவம்,  தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான சுகாதாரம் அமைச்சின் கீழ் 2002 ஆம் ஆண்டு தொடக்கம் எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயலாற்றுவதற்கான உலகளாவிய நிதியத்தின் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த கருத்திட்டத்தின் மூலம் காசநோய் மற்றும் எச்ஐவிஃஎயிட்ஸ் போன்ற இரண்டு கூறுகள் மாத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. காசநோய்க் கட்டுப்பாட்டுக்கான தேசிய மூலோபாயத் திட்டம் மற்றும் இலங்கையில் எயிட்ஸ் தொற்றை முடிவுறுத்துவதற்கான 2023 – 2027 தேசிய மூலோபாயத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் நோக்கங்களை அடைவதற்காக 2025-2027 ஆண்டுக்கான நன்கொடை நிதியச் சுற்றை நடைமுறைப்படுத்துவது பொருத்தமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

2025-2027 காலப்பகுதியில் காசநோய் கூறுக்கான 2.97 டொலர் நிதியும் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்கு 6.38 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிராகச் செயலாற்றுவதற்கான உலகளாவிய நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த நன்கொடை நிதியத்தைப் பயன்படுத்தி குறித்த இரண்டு வேலைத்திட்டங்களையும் வௌ;வேறாக நடைமுறைப்படுத்துவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.