பஸ் கட்டணத்தை குறைக்க தீர்மானம் ; பஸ் சங்கங்கள் கடும் எதிர்ப்பு!

88 0

பஸ் கட்டணத்தை 2.5 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையில் இன்று புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 01 ஆம் திகதியிலிருந்து பஸ் கட்டணம் 2.5 சதவீதம் குறைக்கப்படும் எனவும் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், பஸ் சங்கங்களின் உறுப்பினர்கள் இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கான பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படாது எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.