டபிள்யூ.எம். மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸுக்கு எதிரான மோசடி வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அநுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (25) உத்தரவிட்டுள்ளது.
நொச்சியாகம பி.டி.ஜி நிறுவனத்திடமிருந்து அதிக அளவு சோளத்தைப் பெற்று, 5 கோடியே 29 இலட்சம் ரூபா மோசடி செய்ததாக அர்ஜுன் அலோசியஸுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று புதன்கிழமை (25) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த மோசடி வழக்கு தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்த அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.