சர்வதேச நிபுணர்கள் மனித புதைகுழி அகழ்வில் ஈடுபட்டால் மாத்திரமே இனப்படுகொலைக்கு நீதி சாத்தியம்

77 0

யாழ். செம்மணி படுகொலைகளிற்கு நீதிவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தமிழ்நாட்டின் இன அழிப்பிற்கு எதிரான இஸ்லாமிய இயக்கம் தமிழர்களின் நிலத்தில் நடைபெற்ற அகழ்வு பணிகளும் ஆய்வுகளும் சர்வதேச நியமங்களின்படி சர்வதேச நியமங்களின்படி அத்துறையில் நிபுணத்துவம் கொண்ட சர்வதேச ஆய்வாளர்களினால் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே இனப்படுகொலைகளிற்கு நேர்மையான விசாரணை இடம்பெறமுடியும் என தெரிவித்துள்ளது.

தமிழர் பகுதிகளில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் அவற்றை சுற்றியுள்ள நிலப்பகுதிகள் மற்றும் நிரந்தர கட்டிடங்கள் அமைக்கப்பட்ட பகுதிகளில் கூட புதைகுழிகள் இருக்க வாய்ப்புள்ளதால் அவற்றையும் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது.