சரணாலயத்தில் ஆமை இறைச்சியுடன் மூன்று பெண்கள் கைது

82 0

பொலன்னறுவை பகுதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்திற்குள் பதின்மூன்று “flapshell turtles” வகை  ஆமைகளை கொலை செய்து இறைச்சியை சமைத்து உட்கொள்ள முயற்சித்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (24) பிற்பகல் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு  நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஆமை இறைச்சி, ஆமை கால்கள் மற்றும் முட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில்  பொலன்னறுவை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஆர்.ஆர். சாந்த தெரிவித்துள்ளதாவது,

சந்தேக நபர்கள் புத்தளம் மற்றும் மன்னாரை வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர், மேலும் அவர்கள் அந்தப் பகுதியில் வணிக நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

விசாரணையில், பெண்கள் தமன்கடுவ கனுவ பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்ததாகவும், சரணாலயத்திற்குள் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களை இறைச்சிக்காக வெட்டி உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.