உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு

86 0

ஒன்லைன் முறையின் கீழ் வரி அறிக்கையை முன்வைப்பது உள்ளிட்ட வரி அறவீடு தொடர்பில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களை விளிப்புணர்வூட்டும் செயலமர்வு கடந்த புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வரி அறவீடு தொடர்பில் பொது மக்களுக்குத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமான இந்தச் செயலமர்வு இடம்பெற்றது.

இந்த செயலமர்வின் வளவாளர்களாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ். சாந்த உள்ளிட்ட அதிகாரிகள் , அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற சட்டவாக்கப் பணிப்பாளரும், தொடர்பாடல் பதில் பணிப்பாளருமான எம். ஜயலத் பெரேரா உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர்.