உரிமைக்காக எழு தமிழா பெல்ஜியம் தலைநகரான புருசலில் நடைபெற்றது.

192 0

தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி கோரி, தமிழீழ விடுதலைக்காக ஒரு பெரும் மக்கள் எழுச்சியாக “உரிமைக்காக எழு தமிழா” என்ற முழக்கத்துடன் போராட்டம் இன்று (23.06.2025) ஆரம்பமானது. இந்த போராட்டம் பெல்ஜியம் தலைநகரான புருசலில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்றலில் நடைபெற்றுவருகிறது. பெருந்திரளான தமிழ் மக்கள் இதில் கலந்து கொண்டு, தமிழீழ மக்களின் உரிமை மற்றும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி முழக்கம் எழுப்பினர்.

“தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலமாக இருக்கக்கூடாது. விடுதலைக்காக தொடர்ந்து நாங்கள் எழுவோம்” என்ற உறுதியான நகர்வுடன் இந்த எழுச்சிப் பேரணி, தமிழின அழிப்பு மற்றும் அரசியல் தீர்வை நோக்கி, சர்வதேசத்தைச் செவிமடையச் செய்யும் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நிகழ்வுகளில் பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமானது

குறித்த நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் தமிழர்களின் சமகால அரசியல் நிலை குறித்தும் சிங்கள பேரினவாதி அனுராவின் சதிகள் தொடர்பிலும் , சிங்கள அரசிற்கு எவ்வாறு பொறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பிலும் எமது போராட்டத்தின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் உரையாற்றினார்கள் .