டிரம்பின் யுத்த நிறுத்த தகவல் முற்றிலும் பிழையானது – ஈரான் ஊடகம்

104 0
image

ஈரான் இஸ்ரேல் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருப்பது முற்றிலும் பிழையான தகவல் என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புபட்ட ஈரானின் பார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் அறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஈரானின் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ அல்லது உத்தியோகபூர்வமற்ற யுத்த நிறுத்த யோசனைகள் எவையும் கிடைக்கவில்லை என தெரிவித்துள் ஈரானிய வட்டாரங்கள் தனது நடவடிக்கை மூலம் இந்த செய்தி தவறானது என்பதை விரைவில் ஈரான் இஸ்ரேலிற்கு வெளிப்படுத்தும் என குறிப்பிட்டுள்ளன.