காணி விடுவிப்பை வலியுறுத்தி மயிலிட்டியில் இன்றும் (23) மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலிட்டி சந்தியில் சனிக்கிழமை (21) இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மக்கள் தமது காணிகளை அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





