சர்வதேச தாதியர் தினம், வவுனியா பொது வைத்தியசாலையில்…..(காணொளி)

451 0

வவுனியா பொது வைத்தியசாலையில், சர்வதேச தாதியர் தினம் இன்று வைத்தியசாலை பணிப்பாளர் கே.அகிலேந்திரன் தலைமையில் அனுஸ்டிக்கப்பட்டது.

சர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தாதியர்களுக்கு முன்னோடியான “புளோரன்ஸ் நைற்றிங் கேள்” தாதியின் படத்திற்கு முன்னால் தீப விளக்கேந்திய தாதியர்கள் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து தாதியர் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.