ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இலங்கைப் பிரதிநிதி தகபுமி கடோனோ மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான தேசிய வணிகமயமாக்கல் அணுகுமுறை (NIRDC) பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு வெள்ளிக்கிழமை (20) ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை முகவர் நிலையத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தித் துறையில் சர்வதேச அனுபவம் பெற்ற சிங்கப்பூரின் நன்யெங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (Nanyang Technological University) பேராசிரியர் லர்வென் லு மற்றும் (Professor Lerwen Liu) மற்றும் IITM பிரவர்தக் தொழில்நுட்ப அமைப்பின் (IITM Pravartak Technologies Foundation) புதிய அணுகுமுறைகளின் (New Initiatives) தலைவரான ராஜேந்திர மோத்தா (Rajendra Motta) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசிய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கொள்கைகளை உருவாக்குவதற்கு, NIRDC ஆல் செயல்படுத்தப்படும் வணிகமயமாக்கல் செயல்முறைக்கும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்துவது பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
NIRDC-யைப் பிரதிநிதித்துவப்படுத்தி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் NIRDC நிறுவனருமான பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, NIRDC பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித டீ. செனரத் யாபா மற்றும் பணிப்பாளர் (முதலீடுகள்) இந்துனில் குணதிலக ஆகியோர் உட்பட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.



