பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் போதைப்பொருளுடன் கைது

61 0

பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று வியாழக்கிழமை (19) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கொழும்பு – மிரிஹான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் கொழும்பு, நுகேகொடை, கங்கொடவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபர் மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடுதல் உள்ளிட்ட 3 திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்டப்டுள்ளது.

சந்தேக நபருக்கு எதிராக நீதிமன்றில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிஹான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.