செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் உண்மை கண்டறியபடவேண்டும் என கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதன்போது குறித்த பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டனர்.
குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் “இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோருக்கு நீதி கோருகின்றோம்“ எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

