யாழ். மானிப்பாயில் உருக்குலைந்த நிலையில் முதியவர் ஒருவரது சடலம் நேற்று புதன்கிழமை (18) மீட்கப்பட்டது.
மானிப்பாய் – வடலித்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் நான்கு நாட்களுக்கு முன்னரே உயிரிழந்துள்ளார். இதனை யாரும் அவதானிக்காத நிலையில் துர்நாற்றம் வீசியுள்ளது.
இந்நிலையில் மானிப்பாய் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. அந்தவகையில் குறித்த வீட்டுக்கு சென்ற பொலிஸார் குறித்த முதியவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டதை அவதானித்தனர்.
சடலத்தை மீட்ட மானிப்பாய் பொலிஸார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

