ஈரானின் ஆன்மீகதலைவர் ஆயத்தொல்லா கமேனியை இஸ்ரேல் இலக்குவைப்பதற்கான சாத்தியக்கூறுகளை பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு நிராகரிக்க மறுத்துள்ளார்.
ஏபிசி நியுசிற்கு வழங்கிய பேட்டியில் ஈரானின் ஆன்மீகதலைவரை கொலை செய்வது ஈரான் இஸ்ரேல் மோதலை முடிவிற்கு கொண்டுவரும் மேலும் தீவிரப்படுத்தாது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆன்மீக தலைவரை கொலை செய்தால் மோதல் மேலும் தீவிரமடையும் என்ற கரிசனை காரணமாக இந்த யோசனையை அமெரிக்க ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என ஊடகங்களில் வெளியான தகவல்கள் குறித்து ஏபிசிநியுசின் வோசிங்டனிற்கான தலைமை செய்தியாளர் ஜொனதன் கார்ல் கேள்வி எழுப்பியவேளை அவரை கொலை செய்வது மோதலை மேலும் தீவிரப்படுத்தாது முடிவிற்கு கொண்டுவரும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் அனைவரையும் அச்சுறுத்தும் இந்த ஆட்சியாளர்கள் பரப்பிய அரைநூற்றாண்டு கால மோதல்களை நாங்கள் எதிர்கொண்டுள்ளோம்,இவர்கள் சவுதிஅரேபியாவின் அராம்கோ எண்ணை வயல்கள் மீது குண்டுவீசியுள்ளனர்,பயங்கரவாதம்,கிளர்ச்சி போன்றவற்றை எல்லா நாடுகளிலும் பரப்பிவருகின்றனர் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரான் என்றென்றும் யுத்தத்தை விரும்புகின்றது,அவர்கள் எங்களை அணுவாயுத யுத்தத்தின் விழிம்பிற்கு கொண்டு செல்கின்றனர்,இஸ்ரேல் என்ன செய்கின்றது என்றால் இதனை முடிவிற்கு கொண்டுவர முயல்கின்றது இதனை எப்படி செய்யமுடியும் என்ற தீயசக்திகளை எதிர்ப்பதன் மூலமே இதனை செய்ய முடியும் என பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆன்மீகதலைவரை இஸ்ரேல் இலக்குவைக்குமா என்ற கேள்விக்கு இஸ்ரேல் அவசியமான விடயத்தினை செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

