பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ வழி நடத்த முதல் முறையாக பெண் நியமனம்

108 0

“MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார்.

தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார்.

MI6 மற்றும் MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் – புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார்.

மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்,

“MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் – சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி,

“எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 – MI5 மற்றும் GCHQ உடன் – முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.