இரு வெவ்வேறு பகுதிகளில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது!

88 0

நாட்டில் இரு வெவ்வேறு பகுதிகளில் உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் பொலிஸாரால் திங்கட்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட இரு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, அநுராதபுரத்தில் பதவிய பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் பதவிய,மஹசேன்புர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, மொனராகலை தம்பகல்ல பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் தம்பகல்ல,ருவல்வெல பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதவிய மற்றும் தம்பகல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.