ராகமவில் கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவர் கொலை: மூவர் கைது

69 0

ராகம பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வல்பொல பகுதியில் சனிக்கிழமை (14) ஒரு குழுவினர் கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் பலத்த காயமடைந்J நபரொருவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ராகம வல்பொல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் ஆவார்.

விசாரணைகளில் பணம் கொடுக்கல் வாங்கல்  தகராறினால் இந்த தாக்குதல் மற்றும் கொலை  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 23, 24 மற்றும் 27 வயதுடைய ராகம பகுதியைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.