கடலுக்குள் இறங்கிய பிரான்ஸ் பொலிசார்: புலம்பெயர்வோரை தடுக்க அதிரடி நடவடிக்கை

55 0

ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முயற்சிக்கும் புலம்பெயர்வோரை பிரான்ஸ் பொலிசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பிரித்தானியா தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், பிரான்ஸ் பொலிசார் புலம்பெயர்வோரை தடுக்க, முதன்முறையாக லத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரேயுடன் கடலுக்குள் இறங்கியுள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடலுக்குள் இறங்கிய பிரான்ஸ் பொலிசார்

சட்டவிரோத புலம்பெயர்தலைத் தடுப்பதற்காக முயற்சி எடுக்கவேண்டிய பிரான்ஸ் பொலிசார், தங்கள் தரப்பு விதிகளின்படி கடலுக்குள் இறங்கிய புலம்பெயர்வோரைத் தடுப்பதில்லை.

 

கரையில் நிற்கும்வரைதான் அவர்கள் புலம்பெயர்வோரைத் தடுக்க முயல்வார்கள்.

ஆனால், இம்முறை, அதுவும் முதன்முறையாக, பிரான்ஸ் பொலிசார் Dunkirk நகருக்கு அருகேயுள்ள கடலுக்குள் இறங்கிய புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக லத்தி மற்றும் பெப்பர் ஸ்பிரேயுடன் கடலுக்குள் இறங்கினார்கள்.

ஆனால், கடத்தல்காரர்கள் புலம்பெயர்வோரை கரைக்குச் செல்லாமல் கடலுக்குள் செல்ல உத்தரவிட, அவர்கள் தங்களைத் தடுக்க முயன்ற பொலிசார் மீது தண்ணீரை விசியடித்ததுடன் சிறு சிறு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளார்கள்.

கடலுக்குள் இறங்கிய பிரான்ஸ் பொலிசார்: புலம்பெயர்வோரை தடுக்க அதிரடி நடவடிக்கை | French Police Enter To Sea Stop Immigrants

கரையில் பொலிசார் கண்ணீர் புகை குண்டுகளை வீச, கடற்கரை போர்க்களம்போல காட்சியளித்துள்ளது.

குழந்தைகளின் அழுகை சத்தம் உரத்து ஒலிக்க, தண்ணீரிலிருந்து வெளியேறமாட்டோம் என புலம்பெயர்வோர் மறுக்க, கடத்தல் கும்பல் ஒன்று பிரான்ஸ் அதிகாரிகளிடம் சிக்க, சிறிது நேரத்துக்கு அந்தக் கடற்கரையே ஒரே பரபரபாக காணப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், இவ்வளவும் நடந்தபின்பும், சிறிது நேரத்துக்குப் பின் பொலிசார் கரைக்கு அழைக்கப்பட, தண்ணீருக்குள் நின்ற புலம்பெயர்வோர் சரியாக அங்கு வந்த சிறுபடகுகளில் ஏறிச் சென்றுள்ளார்கள்.