யாழில் கஞ்சா கடத்த முற்பட்டவர் கைது

66 0

யாழ்ப்பாணத்தில் 240 கிலோ கேரளா கஞ்சா பொதிகளுடன் இளைஞன் ஒருவர்  சனிக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்னாலை பகுதியில் உள்ள பற்றைக்காடொன்றினுள் கஞ்சா பொதிகள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , பொதிகளை எடுக்க வருபவரை கைது செய்யும் நோக்குடன் நீண்ட நேரமாக பற்றைக்காட்டினுள் பதுங்கி இருந்துள்ளனர்.

பொலிஸார் பதுங்கி இருப்பதனை அறியாது , கஞ்சா பொதிகளை எடுக்க சென்றவரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் மாதகல் பகுதியை சேர்ந்தவர் ஆவார். மேலும் கைது செய்யப்பட்ட நபரையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதை பொருளையும், மேலதிக நடவடிக்கைக்காக வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.