மெதகம பகுதியில் மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்!

67 0

மொனராகலை, மெதகம, பலகசர பகுதியில் கணவன் ஒருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறினால் நேற்று சனிக்கிழமை (14) மாலை இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலகசர வீதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டினால் பெண்ணொருவர் காயமடைந்து கிடப்பதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார்  காயமடைந்த பெண்ணை வை்ததியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்தனர்.

எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.

கொலை செய்யப்பட்டவர் மெதகம, மாகண்டவின்னவில் வசிக்கும் 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளில் உள்நாட்டு துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

சடலம் வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து சந்தேக நபர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்ய மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.