இஸ்ரேல் தாக்குதல்- ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் பலி

28 0

இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் இரண்டு அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானின் அணுசக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் பெரடுன் அப்பாசி இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.இந்த அமைப்பே ஈரானின் அணுஉலைகளிற்கு பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

2001 இல் இவர் ஈரான் தலைநகரில் கொலைமுயற்சியிலிருந்து உயிர் தப்பினார்.

தெஹ்ரானின் இஸ்லாமிய ஆசாத் பல்கலைகழகத்தின் தலைவரும் கொல்லப்பட்டுள்ளார்.