ட்ரம்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு..! வருத்தம் தெரிவித்த மஸ்க்

110 0

தொழிலதிபர் எலோன் மஸ்க், தனது சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பில் வருந்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் உடனான பிணக்கு தொடர்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உட்பட பிற உயர் அதிகாரிகள் மஸ்க்குடன் கலந்துரையாடினர்.

இதனையடுத்து, மஸ்க் தரப்பில் இருந்து சென்ற குறுகிய தொலைபேசி அழைப்பிலேயே அவர் தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர், எலோன் மஸ்க், பதிவிட்ட ட்ரம்ப் தொடர்பான முக்கியமான சில விமர்சனங்களை ‘X’ தளத்திலிருந்து நீக்கியுள்ளார்.

ட்ரம்பிற்கு சென்ற தொலைபேசி அழைப்பு..! வருத்தம் தெரிவித்த மஸ்க் | Musk Apologizes Trump

ட்ரம்ப் மற்றும் மஸ்க் இடையே கடந்த வாரம் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தது.

 

ஆனால், இப்போது அவர்களின் பகை தணிந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.