பேருவளை பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பேருவளை பகுதியில் பொலிஸாருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஐந்து சந்தேக நபர்கள் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் இன்று (10) மாலை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவான், ஐந்து சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

