மத்திய மாகாண ஆளுநர் பேரசிரியர் சரத் அபேகோனின் உத்தரவுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.எம்.பஸ்நாயக்க தெரிவித்த குற்றச்சாட்டையடுத்தே இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
குறிப்பாக ஹசலக்க கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் இது போன்று இன்னும் பல கூட்டுறவுச் சங்கங்களில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, இம்முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை நடத்தி உண்மைகளை கண்டறிய ஒரு குழுவை அமைக்கவுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.