செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழு அகழ்வு குறித்து விசேட கரிசனைகளைக் கொண்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
செம்மணி சிந்துபாத்தி இந்து மயாணத்தில் நடைபெற்றுவரும் அகழ்வில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அரச தரப்பின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும்.
நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன. ஆகவே நீதிமன்றம் தான் இறுதியான முடிவினை எடுக்கும்.

