ஆண்டுதோறும் அனைத்துலகத் தமிழர் கல்விமேம்பாட்டுப் பேரவை நடாத்தும், அனைத்துலகத் தமிழ்மொழித்தேர்வு ஐரோப்பா, கனடா, தேசங்களை ஒருங்கிணைத்து நடாத்திவருகிறது.. அந்த வரிசையில் நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ்க்கல்வி – கலைக்கழகம் வடபகுதி, மத்தியபகுதி, தென்பகுதி என மூன்று தேர்வு நிலையங்களில் இன்று (07-06-2025) சனிக்கிழமை காலை 09-30 மணிக்கு அகவணக்கத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றது.
ஆண்டு 1 முதல் ஆண்டு 12 வரை தமிழ்மொழி கற்ற மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்குபற்றினார்கள். தேர்வுகள் மதியம் ஒரு மணியளவில் இனிதே நிறைவடைந்தது.
செம்மொழியாம் எம் தமிழ்மொழியை புலம்பெயர்ந்த மண்ணில் எம் அடுத்த தலைமுறை சரியான முறையில் கற்பதற்கு தன்னலம் கருதாது பணிசெய்யும் கல்விப்பணிக்குழு, ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் பாரட்டுதற்கு உரியவர்கள். பெற்றோர்கள் தாம் ஏதிலிகளாக புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழ்மொழியை தம் பிள்ளைகள் கற்பதிலும், தேர்வுகளில் பங்குகொள்வதிலும் அவர்களின் அக்கறையாகவும், உறுதுணையாகவும் இருப்பது அனைவராலும் பராட்டப்படுகிறது.