 மாவீரர் துயிலுமில்லம் அமைத்துத் தரப்படவேண்டுமென கிளிநொச்சி மாவட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நல்லிணக்க பொறிமுறை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட கரைச்சிப் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற 2ஆம் நாள் அமர்வில் அங்கு கலந்துகொண்ட மக்கள் அனைவரும் கூட்டாக இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

மேலும், நாம் இறந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும், எமது சோகங்களை வெளிப்படுத்தவும் எமக்கு மாவீரர் துயிலுமில்லங்கள் வேண்டுமெனவும், அதுவும் மேமாதம் கொண்டாடக்கூடிய வகையில் ஒழுங்குபடுத்தப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டுமெனவும், விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிபதிகள் நியமிக்கப்படுவதோடு, விசாரணைக்காக அமைக்கப்படும் அலுவலகம் கிளிநொச்சி மண்ணிலே அமைக்கப்படவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.