இது தொடர்பில் தெரியவருவதாவது,
பாணந்துறை, வேகட பிரதேசத்திற்கு மே மாதம் 29 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்த பணியாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற சந்தேக நபர் அடையாளங்காணப்பட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களில் உள்ள நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் 075 – 8900009, 071 – 7409070 அல்லது 038 – 2241467 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரின் விபரங்கள் பின்வருமாறு ;
- பெயர் – பல்லேவெல கொடகந்தகே ரஜீவ சுராஜ் சாமர
- முகவரி – இலக்கம் 11/ பீ, ஹொரணை வீதி, அலுபோமுல்ல, பாணந்துறை

