இன்று (05) காலை கடலோர ரயில் பாதையில் ஏற்படவிருந்த பாரிய விபத்தினை மொரட்டுவை, மோதர பகுதியைச் சேர்ந்த ஒருவரால் தடுக்க முடிந்துள்ளது.
கரையோர ரயில் மார்க்கத்தில் மொரட்டுவை, மோதர பிரதேசத்தில் தண்டவாளம் சேதமடைந்து காணப்பட்டுள்ளது.
சேதமடைந்த ரயில் பாதையைக் கண்டதும், சமந்த பெர்னாண்டோ என்ற நபர் விரைந்து செயற்பட்டு, அந்நேரத்தில் வந்து கொண்டிருந்த ரயிலை நிறுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தனது உயிரைப் பணயம் வைத்தும் கூட, ஒரு பெரிய பேரழிவைத் தடுத்த சமந்த பெர்னாண்டோவின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

