வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா

90 0

வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா நவநாள் வழிபாடுகள் நேற்று (4)  மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடனும் கொடியேற்றத்துடனும் ஆரம்பமாயின.

பங்குத்தந்தை அருட்தந்தை அ.டலிமா அடிகளாரால் ஆசிர்வதிக்கப்பட்டு, கொடியேற்றப்பட்டதுடன் திருப்பலி ஆரம்பமானது.

திருப்பலியை புனித வளனார் அன்பியம். பத்தினியார் மகிழங்குளம் புனித வேளாங்கண்ணி ஆலய அன்பிய வலய மக்களால் எதிர்நோக்கின் திருப்பயணத்தில் ஒன்றுபட்ட இறைச்சமூகமாய் என்னும் கருப்பொருளில் சிறப்பித்தார்கள்.திருப்பலியினை அருட்தந்தை பிலிப் றஞ்சனகுமார் அடிகளார்  தலைமைதாங்கி ஒப்புக்கொடுத்தார்.

அடிகளார் சிறுவர்கள், பாடசாலை மாணவர்களுக்கான  சிறந்த மறையுரையினை நிகழ்த்தி, இந்த திருப்பலியை நிறைவேற்றினார். அருட்தந்தையோடு இணைந்து, பங்குத்தந்தை அருட்தந்தை அந்தோனிதா டலிமா அடிகளார், மறைமாவட்டத்தின் மூத்த குரு அருட்தந்தை யேசுராஜா அடிகளார், உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை விமல்ரோய் அடிகளார், மதவுவைத்தக்குளம் செபமாலைதாசஸ் சபையின் முதல்வர் அருட்தந்தை நிர்மலராஜ் அடிகளார், மன்னார் மறைமாவட்டத்தின் வவுனியா இறம்பைக்குளம் புனித ஆராம் பவுல் ஆங்கில பாடசாலையின் அதிபரும் இயக்குநருமான அருட்தந்தை அருட்குமரன் அடிகளார், வவுனியா மகாறம்பைக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை நேரு அடிகளார் ஆகிய அருட்தந்தையர்களினால் திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

புனித அந்தோனியார் திருநாளுக்கான திருப்பலி நிகழ்வு எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறவுள்ளது.