காணாமல்போன பெண் வனப்பகுதியிலிருந்து சடலமாக மீட்பு!

131 0

மொனராகலையில் தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து நேற்று புதன்கிழமை (02) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

தொம்பகஹவெல, நுககஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன பெண்ணின் சடலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து மீட்கப்பட்டதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமானது சியம்பலான்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.