இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கம்

83 0

இலஞ்ச குற்றச்சாட்டுக்கள் தொடர்பான முறைப்பாடுகளை அளிப்பதற்கு 1954 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

எவரேனும் உங்களிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ள முயன்றால் அல்லது இலஞ்சம் வழங்க முயன்றால் மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் அனைவரும் சமூக பொறுப்புடன் செயற்பட்டு இலஞ்சம் மற்றும் ஊழலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.