மதுரங்குளியில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி !

86 0

மதுரங்குளி பொலிஸ் பிரிவின் சீமரகம பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சீமரகம கோட்டன்தீவு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் என தெரியவந்துள்ளது.

வீட்டில் உள்ள மின் ஆழியில் மின் சாதனத்தை  பொருத்த முயன்றபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில்  மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.