பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தைை குறைக்கும் சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்வாேம்

119 0

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகார்தை நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரும் வகையில் அரசாங்கம் சட்டமூலம்  ஒன்றை தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டிருக்கிறது. இது மக்கள் ஆணையை காட்டிக்கொடுக்கும் செயலாகும். இந்த சட்டமூலத்துக்கு எதிராக  நீதிமன்றம் செல்வோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மின்சார சபை திருத்தச் சட்டமூலம் வர்த்தமானி படுத்தப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் அன்றாட வாழ்க்கை நிலையை கொண்டுசெல்ல முடியாமல் இருக்கும் நிலையில் மின்சார கட்டணத்தை  நூற்றுக்கு 18.3 வீதத்தால் அதிகரிக்கமாறு அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆராய்ந்து மக்களின் நிலைமை தொடர்பாக கருத்திற்கொண்டு தீர்மானம் எடுப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கும் ஆணைக்குழுவே பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவாகும்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு முன்னர் பிரஜைகளின் நலன்கருதி நாட்டின் சட்டத்துக்கு அமைய செயற்பட்டிருக்கிறது. ஆனால் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இருக்கும் அதிகாரத்தை நிதி அமைச்சருக்கு பய்படுத்த முடியுமானவகையில் மின்சாரசபை சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள தற்போது சட்டமூலம் தயாரித்திருக்கிறது. இது பிரஜைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித்திட்டம் என்பதுடன்  நுகர்வோர் வெற்றிகொண்ட உரிமையை இல்லாமலாக்கச்செய்யும் விடயமாகும்.

இந்த சட்டமூலத்தை அரசாங்கம் சமர்ப்பிக்குமானால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குவினால் எந்த பயனும் இல்லை.  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு சுயாதீீன ஆணைக்குழுவாக செயற்பட்டே மின்சாரசபை, மின்சாரசபை சமர்ப்பிக்கும் மின்சார கட்டணம் தொடர்பில் ஆராய்ந்தே மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா குறைப்பதா என அவர்கள் தீர்மானிக்கின்றனர். மின் உற்பத்தி  செலவுகளுக்கு அமைய மின் கட்டணம்   இதற்கு முன்னர் குறைந்தும் இருக்கிறது  அதிகரித்தும் இருக்கிறது.

ஆனால் மக்களின்  உரிமைகளை பாதுகாப்பதாக வாக்குதியளித்த அரசாங்கம் தற்போது அதிகாரத்துக்கு வந்து  6 மாதங்களில், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரத்தை  குறைத்து சட்டமூலம்  ஒன்றை தயாரித்து வர்த்தமானியில் வெளியிட்டிருக்கிறது. இது மக்கள் ஆணையை காட்டிக்கொடுக்கும் செயலாகும்.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறோம். அதேபோன்று இந்த சட்டமூலத்தினால்  அரசியல் அமைப்பை மீறும் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதா என தேடிப்பார்க்குமாறு தொழிற்சங்கங்கள் மற்றும் பல  சிவில் அமைப்புகள் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றன. எனவே  நுகர்வோரை பாதுகாத்துக்கொள்ள  ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும்  போராடும்  என்றார்.