யாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு! – யாழ் பொது நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் கவனயீர்ப்பு கண்காட்சி எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் – யேர்மனியில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் நினைவுவேந்தல் தமிழர்களின் அறிவுக்களஞ்சியமான யாழ் பொது நூலகம் பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடக்கின்றது. தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாததொழிக்கும் சிறிலங்கா அரசின் கட்டமைப்புசார் இனவழிப்பின் ஓர் அங்கமான பண்பாட்டுப் படுகொலையாக அரங்கேற்றப்பட்டதே யாழ் நூலக எரிப்பாகும்.
மேற்படி நூலக எரிப்பின் 44 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யேர்மனியில் பேர்லின் நகரில் ஹிட்லர் ஆட்சியில் யூத மக்களின் நூல்கள் எரிக்கப்பட்ட நினைவிடத்தின் (Bebelplatz) முன்றலில் 01.06.2025 அன்று மதியம் நடைபெற்றது.
“எங்கு நூல்கள் எரிக்கப்படுகின்றதோ அங்கு மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்” எனும் வாசகம் பதாதையில் பொறிக்கப்பட்டு, 44 ஆண்டுகளை நினைவுபடுத்தும் முகமாக தமிழ் இளையோர் அமைப்பால் கண்காட்சி வைக்கப்பட்டது பல்லினமக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்தது. பிரசித்திபெற்ற நினைவிடத்தில் வித்தியாசமான முறையில் இக் காட்சிப்படுத்தல் நடைபெற்றதால் பல்லின மக்கள் அதிகம் ஆர்வத்தோடு கவனித்ததோடு, மட்டும்மல்லாமல் மேலதிகமான விளக்கங்களை பெற்றுக்கொள்ள உரையாடல்களிலும் ஈடுபட்டனர். அத்தோடு ஆர்வம் கொண்டவர்களுக்கு ஆங்கிலத்திலும் யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.




























