வவுனியா ஆச்சிபுரம் கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில்…..(காணொளி)

280 0

 

வவுனியா சமணங்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமத்தில், வீட்டுத்திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை ஏற்பட்டதுடன், கிராம மக்கள் நேற்று அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆச்சிபுரம் கிராமத்தில் 365 குடும்பங்கள் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ஆச்சிபுரம் கிராமத்திலுள்ள மக்களுக்கு வவுனியா பிரதேச செயலத்தினூடாகவே காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வீடமைப்பு அதிகார சபையினூடாக 136 வீடுகள் ஆச்சிபுரம் கிராமத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.அருள்குமார், ஆச்சிபுரம் கிராமம் வீடமைப்பு அதிகார சபையினால் இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒரு பகுதி மயிங்குளம் கிராம சேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து, கிராம மக்கள் அபிவிருத்தி உத்தியோகத்தருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து ஆச்சிபுரம் கிராம மக்கள் கருத்து தெரிவிக்கையில், 136 வீடுகள் வழங்கப்பட்டுள்ளது என்ற விடயம் நேற்று முன்தினம் மாலையில் தான் அறிவிக்கப்பட்டது என்பதுடன், எமது கிராமமானது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதும் இன்று தான் தெரியும் எனவும், இவ்வாறு கிராமத்தை திடீரென இரண்டாக பிரிப்பது எந்த விதத்தில் நியாயம் எனவும் கேள்வி எழுப்பினர்.