சிரியாவின் மூலாபாய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஒன்றை சிரிய கிளர்ச்சியாளர்கள் மீட்டுள்ளனர்.

244 0

சிரியாவின் ரக்கா பிராந்தியத்தில் உள்ள மூலாபாய முக்கியத்துவம் வாய்ந்த நகர் ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து, சிரிய கிளர்ச்சியாளர்கள் மீட்டுள்ளனர்.

ரக்கா பிராந்தியத்தை ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்து மீட்பதற்காக, குர்திஸ் படையினருக்கு ஆயுதங்களை வழங்க அமெரிக்கா நேற்று தீர்மானித்திருந்தது.

இந்த திட்டத்துக்கு துருக்கி எதிர்ப்பை தெரிவிக்கும் என்று கருதப்பட்ட போதும், அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த விடயத்தில் இணக்கம் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

முன்னர் அமெரிக்கா அரேபிய போராளிகளுக்கு மாத்திரமே ஆயுதங்களை வழங்கி வந்தது.

தற்போது குர்திஸ் படையினருக்கும் ஆயுதங்களை விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகிய மறுதினம், ரக்காவின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய நகர் ஒன்றையும், பாரிய நீர்த்தேக்கம் ஒன்றையும் குர்திஸ் படையினரும், ஜனநாயக கிளர்ச்சிக் குழுவினரும் இணைந்து மீட்டுள்ளனர்.