தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவ பயணித்த வாகனத்தின் மீது கடந்த 17 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அறுவரும் இன்று வியாழக்கிழமை (29) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

